Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டின் இயல்பு நிலையை கேள்விக்குள்ளாக்கும் இனவாதிகளும், கடும்போக்காளர்களும் கோலொச்சுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த நாட்டிலே வாழ்கின்ற சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும், பறங்கியர்களுக்குமென சிறப்பான சரித்திரமும் கலாசாரமும் உண்டு. இதனை யாரும் கொச்சைப்படுத்திவிட முடியாது. நாட்டிலே சட்டப்புத்தகத்தில் இருக்கின்ற விடயங்களை விட, இந்த நாட்டிலே வாழ்கின்ற அனைத்து இன மக்களுக்கும், கண்ணியமும் கௌரவமும் வழங்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு வெபர் உள்ளக விளையாட்டரங்கைத் திறந்து வைக்கும் நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. அங்கு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்ட விடயங்களைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “வடக்கு, கிழக்கு உட்பட 9 மாகாணங்களுக்கும் சம அளவிலான அபிவிருத்திகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின், அது குறித்த பரிசீலனைகள் மேற்கொள்ளப்படும். அத்துடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி அபிவிருத்தி நடவடிக்கைகள் பின்னடைந்தமைக்கு, காலநிலையே காரணமாக அமைந்திருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகின்றது. இது தொடர்பிலும் பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன' என்றுள்ளார்.

0 Responses to இனவாதிகளும், கடும்போக்காளர்களும் கோலோச்சுவதற்கு அனுமதியில்லை: ஜனாதிபதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com