Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மாணவர் குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் அதிர்ச்சியடைந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதில், அந்தச் சம்பவம் கவலை அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, யாழ். பல்கலைக்கழக மோதல் சம்பவத்தில் பல மாணவர்கள் காயமடைந்தமை மற்றும் முன்னெச்சரிக்கையின் அடிப்படையில் சிங்கள மாணவர்கள், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டமை குறித்து நாம் வருந்துகின்றோம்.

அத்துடன், நாட்டில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நல்லிணக்க நடவடிக்கைகளின் கீழ் இந்த மாதிரியான சம்பவங்கள் மீண்டும் இடம்பெற மாணவர்கள் அனுமதிக்கக்கூடாது.

யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மாணவர்கள் மீண்டும் திரும்பி வந்து தமது கல்வியை தொடர வேண்டும். மேலும் ஏனைய மாணவர்கள் குறித்த மாணவர்களை வரவேற்று, அவர்களது பாதுகாப்பு மற்றும் கல்வி பயிலும் உரிமைகளை உறுதி செய்ய வேண்டும்.” என்றுள்ளது.

0 Responses to யாழ். பல்கலை மோதல் சம்பவம் தொடர்பில் கூட்டமைப்பு கவலை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com