அமெரிக்காவில் பொருளாதார மோசடிக் குற்றச்சாட்டில் 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ராஜ் ராஜரட்னத்துக்கு தொழில்சார் உதவிகளை தான் வழங்கியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட ராஜ் ராஜரட்னத்திற்கு தாம் பொருளியலாளர் என்ற அடிப்படையில் தொழில்சார் உதவிகளை வழங்கியதாக, குறிப்பாக, ஆய்வு அறிக்கைகளை தயார் செய்து வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“பல்கலைக்கழக நாட்களில் எனக்கு ராஜ் ராஜரட்னத்துடன் நட்பு ஏற்பட்டது. நண்பர் என்ற ரீதியில் ராஜை தெரியும். அவர் இலங்கைக்கு பல்வேறு நலன்களை செய்துள்ளார். குறிப்பாக, நன்கொடைகளை வழங்கியுள்ளார்.” என்று இந்திரஜித் குமாரசுவாமி மேலும் கூறியுள்ளார்.
மத்திய வங்கியின் புதிய ஆளுநராக பதவியேற்றுள்ள கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமிக்கு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரிப்பில் ஈடுபட்டு மோசடிக் குற்றச்சாட்டில் அமெரிக்காவில் சிறைத்தண்டனை பெற்றுள்ள ராஜ் ராஜரட்னத்துக்கும் தொடர்பு இருப்பதாக கூட்டு எதிர்க்கட்சி (மஹிந்த ஆதரவு அணி) குற்றஞ்சாட்டி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to ராஜ் ராஜரட்னத்திற்கு தொழில்சார் உதவிகளை வழங்கியுள்ளேன்: இந்திரஜித் குமாரசுவாமி