வடக்கில் பொதுமக்களின் காணிகளில் முகாம்களை அமைத்துள்ள இராணுவம், அங்கிலிருந்து வெளியேறுவதற்கு பணம் கேட்டால், அது தொடர்பில் அரசாங்கம் பரிசீலிக்கும் என்று மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் வந்த அவர், வலிகாமம் வடக்கு காணி விடுவிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்தார்.
அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது, “மீள்குடியேற்றத்துக்காக 1500 ஏக்கர் காணிகளை விடுவிக்க அமைச்சரவையிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் 460 ஏக்கர் காணிகளை விடுவிக்கவே அனுமதி கிடைத்தது.” என்றுள்ளார்.
மயிலிட்டி, பூநகரியின் கஜூ தோட்டத்தை விடுவிக்க இராணுவம் பணம் கேட்டமை தொடர்பில் அவரிடம் வினவியபோது "இராணுவத்தினர் பணம் கேட்டால் பரிசீலிக்கலாம்" என அவர் பதிலளித்துள்ளார்.

0 Responses to காணிகளை விடுவிக்க இராணுவம் பணம் கேட்டால் அரசாங்கம் பரிசீலிக்கும்: டி.எம்.சுவாமிநாதன்