Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அணியினர் நாட்டைச் சீரழிக்கும் முன், அவர்கள் தொடர்பிலான இரகசியங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் முக்கிய பிரச்சினைகளை கையாள்வதில் பிரதான எதிர்க்கட்சி (த.தே.கூ) மௌனம் காக்கின்றது. பிரதான எதிர்க்கட்சி துடிப்பாக செயற்பட்டால் வேறு எவரும் தம்மை எதிர்க்கட்சி என கூறவேண்டிய தேவை ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது. அங்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அநுரகுமார திசாநாயக்க மேற்கண்ட விடயங்களைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “மக்களின் வாழ்வாதார பிரச்சினைகள் மற்றும் வேலைவாய்ப்பு விடயங்களை அரசாங்கம் தான்தோன்றித்தனமாக செயற்பட்டு வருகின்றது. அதேபோல்  சர்வதேச நாடுகளுக்கு இடமளித்து அதன் மூலமாக நாட்டை சீரழித்து வருகின்றது.

இந்தவிடயங்களால் பிரதான எதிர்க்கட்சி வாய்திறக்காது செயல்படுகின்றது என்பது உண்மையே. நாம் ஒருபுறம் எம்மாலான சகல அழுத்தங்களையும் அரசாங்கத்துக்கு எதிராக கொடுத்து வருகின்றோம். எனினும் பிரதான எதிர்க்கட்சி இந்த விடயங்களில் மிகவும் அமைதியாக செயற்படு வருகின்றது. இவ்வாறு பிரதான எதிர்க்கட்சி மௌனமாக செயற்படுவதே ஏனையவர்கள் தம்மை எதிர்க்கட்சி என கூறும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

ஒரு சிலர் தமது இனவாத கருத்துக்களை பரப்பியும் எதிர்க்கட்சி என கூறிக்கொண்டு தமது ஊழல் மோசடிகளை மறைக்க முயற்சித்து வருகின்றனர்.  ஆகவே  பிரதான  எதிர்க்கட்சி துல்லியமாக செயற்பட வேண்டும்.

அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் குழப்பங்கள், அவர்களில் ஒருசிலர் மீது எடுத்துள்ள நடவடிக்கைகள் என்பன நாட்டில் பிரதான பிரச்சினைகள் அல்ல. இந்த பிரச்சினைகளை ஊடகங்கள் பெரிது படுத்தி மக்களின் பிரதான பிரச்சினைகளை பின்தள்ளவேண்டாம்.

அதேபோல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்பிலான உண்மைகளை மூடிமறைப்பதன் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசுன தன்னை நம்பி வாக்களித்த மக்களை ஏமாற்றுகின்றார். தனக்கு தேவைப்படும் போது மஹிந்தவை காப்பாற்றுவதும் கட்சிக்குள் சிக்கல் ஏற்படும் நிலையில் அவர் தொடர்பிலான உண்மைகளை வெளியிடுவேன் என கூறுவதும் தனது சுயநலத்தையே வெளிப்படுத்துகின்றது. ஆகவே மஹிந்த அணியினர் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்த முன்னர் ஜனாதிபது உண்மைகளை வெளியிட வேண்டும்.” என்றள்ளார்.

0 Responses to மஹிந்த அணி நாட்டைச் சீரழிக்கும் முன் மைத்திரி இரகசியங்களை வெளியிட வேண்டும்: அநுரகுமார

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com