புதிய கட்சிக்கான யாப்பு தயார் நிலையில் இருப்பதாகவும், எதிர்வரும் ஆண்டு நடைபெறவுள்ள மூன்று மாகாண சபைத் தேர்தல்களையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் வெற்றி கொள்வோம் என்றும் கூட்டு எதிரணி (மஹிந்த ஆதரவு அணி) முக்கியஸ்தர்களான எஸ்.எம்.சந்திரசேன மற்றும் ரோஹித்த அபேகுணவர்தன ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் தெரிவித்துள்ளதாவது, “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கோட்டையான பொலனறுவை மாவட்டம் அமைந்துள்ள வடமத்திய மாகாணத்திலும் எமது வெற்றிக் கொடி பறக்கும். அடுத்த வருடம் நாட்டுக்கு முக்கியத்துவமிக்க காலப்பகுதியாகும். மூன்று மாகாண சபைகளுக்கு தேர்தல்கள் நடக்கவுள்ளன. உள்ளூராட்சி சபைத் தேர்தலும் நடைபெறும். இந்தத் தேர்தல்களில் மஹிந்த தலைமையில் வெற்றிபெறுவதற்குரிய வியூகங்கள் அனைத்தும் வகுக்கப்பட்டுள்ளன.
புதிய அரசியல் கட்சிக்கான யாப்பு உள்ளிட்ட விடயங்களும் தயார்நிலையில் இருக்கின்றன. எனவே, அநுராபுதரம் மாவட்டத்திலுள்ள சகல உள்ளூராட்சி சபைத் தேர்தல்களிலும் பொது எதிரணி வெற்றிபெறும். குறிப்பாக வடமத்திய மாகாண சபையையும் கைப்பற்றுவோம்
நகர சபைத் தேர்தலில்கூட வெற்றிபெற முடியாதவர்களுக்கு அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மஹிந்த பக்கம் இருப்பவர்களே கட்சிக்குள் ஆலமரங்களாக இருந்தன. எம்மை அவர்கள் நீக்கிவிட்டாலும் பலத்தைக் காட்டுவோம். ஒருபோதும் எம்மை அசைக்கமுடியாது. அரசு தேர்தலை நடத்தினால் பலத்தைக் காட்டுவோம்" என்றுள்ளனார்.

0 Responses to புதிய கட்சிக்கான யாப்பு தயார்; எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல்களை வெற்றி கொள்வோம்: கூட்டு எதிரணி