Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காணாமற்போனவர்கள் தொடர்பிலான அலுவலகம் (தாபித்தலும், நிருவகித்தலும், பணிகளை நிறைவேற்றுதலும்) சட்டமூலம் நேற்று செவ்வாய்க்கிழமை முதல் அமுலுக்கு வந்தாலும், குறித்த சட்டமூலம் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பரிந்துரைகளை உள்வாங்கவில்லை என்று நல்லிணக்கப் பொறிமுறைக்கான பொதுமக்கள் கலந்தாலோசனைச் செயலணி குற்றஞ்சாட்டியுள்ளது. 

குறித்த செயலணி தெரிவித்துள்ளதாவது, “நல்லிணக்கப் பொறி முறையில், நீதி வழங்குதல், பொறுப்பு கூறல், ஈடு செய்தல், உண்மையைக் கண்டறிதல், இழப்பீடு வழங்குதல் ஆகிய நான்கு அம்சங்களைச் செயற்படுத்துவதில், காணாமற்போனோருக்கான அலுவலகத்தை அமைப்பதற்கான சட்டமூலம் கொண்டு வரப்படுவது நம்பிக்கை தரத்தக்க ஆரம்பம்.

ஆயினும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் கருத்துக்களை உள்ளடக்கி அந்தச் சட்டத்தை அரசாங்கம் மெருகூட்டிய போதிலும், அந்த குடும்பங்களின் பரிந்துரைகளைக் கொண்ட தனது இடைக்கால அறிக்கையை அரசாங்கம் கவனத்தில் எடுக்காமல் விட்டுவிட்டது.

அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையைக் தட்டியெழுப்பவும், அதனை உறுதிப்படுத்தவும் நல்லிணக்கப் பொறிமுறையை நிறுவும்போது பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்கள், பரிந்துரைகளை உள்ளடக்குதல் அவசியமானதாகும், இது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

அவ்வாறு உள்ளடக்கப்படாமல் விட்டால், பாதிக்கப்பட்ட மக்களின் குரல்கள் கேட்கப்படுவதற்காக அரசாங்கத்தினர் ஏற்படுத்தப்பட்ட இந்த வரலாற்றுச் சந்தர்ப்பம் கை நழுவிப் போய்விடும்.” என்றுள்ளது.

0 Responses to காணாமற்போனவர்கள் தொடர்பிலான அலுவலகம் பாதிக்கப்பட்டவர்களின் கருத்துக்களை உள்வாங்கவில்லை; குற்றச்சாட்டு முன்வைப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com