Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சசிகலா புஷ்பா எம்பியை கைது செய்ய 6 வாரங்கள் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

வீட்டுப் பணிப்பெண்களை பல்வேறுவகையில் துன்புறுத்தியதாக தூத்துக்குடி காவல் நிலையத்தில் சசிகலா புஷ்பா மற்றும் அவரது மகன், கணவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் தம்மை கைது செய்துவிட முடியாதபடி, முன் ஜாமீன் தாக்கல் செய்திருந்தார். தூத்துக்குடி நீதிமன்றத்தில் மனு தள்ளுபடியான நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார் சசிகலா புஷ்பா. 

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 6 வார காலத்துக்கு சசிகலா புஷ்பாவை கைது செய்யக் கூடாது என்றும், தமிழ் நாட்டுக்கு அவர் விசாரணைக்கு வரும்போது, தமிழக போலீசார் சசிகலா புஷ்பாவுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவுப் பிறப்பித்துள்ளார்.

0 Responses to சசிகலா புஷ்பா எம்பியை கைது செய்ய 6 வாரங்களுக்கு தடை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com