Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உத்திர பிரதேசத்தில் மக்களிடையே உரையாற்றிக்கொண்டு இருந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி மீது, கூட்டத்திலிருந்த இளைஞர் ஒருவர் ஷூவை ராகுல் மீது வீசி இருந்துள்ளார்.

உத்திர பிரதேசத்தில் விரைவில் சட்டப்பேரவைத்த தேர்தல் நடக்க உள்ளதால், அங்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பிரச்சாரங்கள் செய்து வருகிறார். சீதாப்பூரில் ராகுல் காந்தி திறந்த வேனில் மக்களிடையே உரையாற்றிக் கொண்டிருந்தார். மக்களிடையே உரையாற்றிக் கொண்டிருந்த ராகுல் மீது திடீரென ஒரு இளைஞர் மீது ஷூவை எறிந்தார். 

ஆனால் ஷூ ராகுல்  மீது படவில்லை. உடனடியாக பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார் அந்த நபரைப் பிடித்து அப்புறப்படுத்தினர். அந்த இளைஞரைக் கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.

0 Responses to உத்திர பிரதேசத்தில் ராகுல் காந்தி மீது இளைஞர் ஒருவர் செருப்பு வீச்சு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com