Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திருநங்கையருக்கு தனி கழிப்பறையை கட்டிக்கொடுத்து அவர்கள் வசதியை மேம்படுத்தும் விதமாக  ஓமலூர் பேரூராட்சி அசத்தல் நடவடிக்கை எடுத்துள்ளது. இது இந்தியாவிலேயே முதன்முறையாக  திருநங்கையர்களுக்கு என்று கட்டப்பட்ட கழிப்பறையாகும்.

சேலம் மாவட்டம், ஓமலூர் பேருந்து நிலையத்தில்  கட்டண கழிப்பறை உள்ளது. இதன் அருகே, திருநங்கையர் மட்டும் பயன்படுத்த கூடிய ஒரு கழிவறை மற்றும் குளியலறை, பேரூராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ளது. 

இந்த இடத்தை, கடந்த, 24-ஆம் தேதி சேலம் கலெக்டர் சம்பத் ஆய்வு செய்தார். இந்தியாவிலேயே, தமிழகத்தில் முதன் முதலாக, ஓமலூரில் திருநங்கையர்களுக்கென தனித்தனியாக கழிவறை வசதியும், பாத்ரூம் வசதியும் அமைக்கப்பட்டுள்ளது. மின் விளக்கு வசதி, 24 மணிநேரம் தண்ணீர் வசதியுடன், சுற்றியும் தகரம் மூலம் அடைப்பு ஏற்படுத்தி, இரண்டு கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன. முன்னதாக ''சேலம் மாவட்ட திருநங்கையர் நலச்சங்கம் சார்பில், தங்களுக்கு தனி கழிவறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று மனு அளித்திருந்தனர் என்று தெரிய வருகிறது. 

இதையடுத்து, இப்பணி மேற்கொண்டதாகவும், உள்ளாட்சி தேர்தல் முடிந்த பின், திறப்பு விழா நடைபெறும், என, ஓமலூர் பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி கூறினார். 

மாவட்ட திருநங்கையர் நலச் சங்க தலைவி பூஜா கூறியதாவது: சேலத்தில், 2,100 திருநங்கையர் உள்ளனர். முதன் முறையாக, ஓமலூரில் எங்களுக்கென, தனியாக கழிவறையுடன் கூடிய பாத்ரூம் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. என்று கூறினார்.

0 Responses to இந்தியாவிலேயே முதன் முறையாக திருநங்கையருக்கு தனி கழிப்பறை: ஓமலூர் பேரூராட்சி அமைத்தது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com