தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைகளை வெற்றி கொள்வதற்கு அரசியல் தலைவர்களில் மாத்திரம் தங்கியிருக்க முடியாது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
எழுக தமிழ் பேரணி தமிழ் தேசத்தின் எதிர்காலத்தில் பாரியதொரு மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய சக்தியாக அமைந்துள்ளதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற எழுக தமிழ் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “எதிர்காலத்தில் தமிழினம் தனது அபிலாசைகளை வென்றெடுக்க வேண்டுமாயின் வெறுமனே எங்களுடைய அரசியல் தலைவர்களை நம்பியிருக்க முடியாது. தமிழினம் வீதியில் இறங்க வேண்டும். தனது பலத்தை நிரூபிக்க வேண்டும். அவ்வாறான நிலை உருவாகும் போது நிச்சயம் எமது இனம் வெற்றி பெறும்.
இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் தமிழ் மக்களின் பேரைப் பயன்படுத்தி அரசியல் அமைப்பு இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. அந்த அரசியல் அமைப்பைக் கொண்டு வருவதற்கான காரணம் என்ன? ஒரு கொடிய யுத்தத்தை நடாத்தி, பயங்கரவாதத்தை அழிப்பதாகத் தெரிவித்து ஒரு இனத்தையே அழித்தார்கள். போராடிக் கொண்டிருக்கிற இனத்திற்கு உரிய தீர்வை வழங்குவோம் என்கிற வாக்குறுதியை உலகிற்கு வழங்கியிருந்த நிலையில் தற்போது இரகசியமாக இந்த அரசியல் அமைப்புத் தயாரிக்கப்படுகின்றது.
ஏனைய நாடுகளில் ஒரு புதிய அரசியல் யாப்பு உருவாக வேண்டுமெனில் மக்களோடு பேசி, மக்களின் கருத்துக்களை உள்வாங்கி மாதக் கணக்காக மாத்திரமல்லாமல் வருடக் கணக்காக அந்த நாட்டு மக்களின் அபிலாசைகளை முற்று முழுதாகப் பூர்த்தி செய்யக் கூடிய வகையில் அந்த அரசியல் அமைப்பு உள்வாங்கப்பட வேண்டும். அரசியல் அமைப்பு என்பது வெறுமனே ஒரு மாதத்திலோ அல்லது ஒரு வாரத்திலோ உருவாக்கி முடிப்பதல்ல. அரசியல் அமைப்பு என்பது அந்த நாட்டின் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய, சொந்தம் கொண்டாடக் கூடிய ஒரு அமைப்பு.
ஆனால், கடந்த 65 வருடங்களுக்கும் மேலாக எத்தனையோ தியாகங்கள் செய்து, இரத்தம் சிந்தி, அழிந்து போயிருக்கும் எமது மக்களுக்கு நீதி வழங்குவதாகத் தெரிவித்துக் கொண்டு வரவிருக்கும் இந்த அரசியல் அமைப்பின் மூலம் எங்களுடைய மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படப் போகிறதா? என்பது மிகப் பெரிய கேள்விக் குறி. இவ்வாறு கேள்விக் குறியாக இருப்பதற்கு என்ன காரணம்? உண்மையில் எமது மக்களுடைய அபிலாசைகள் முற்றுமுழுதாக ஏற்றுக் கொள்ளக் கூடிய நிலையிருந்தால் ஏன் இந்த இரகசியம்?
தமிழ் மக்கள் பேரவையின் தீர்வாயங்கள் ஏற்கனவே குறிப்பிட்டது போல 65 வருடங்களுக்கும் மேலாக எங்களுடைய அரசியல் அபிலாசைகள் குறித்து நாம் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறோம். ஆனால், இரண்டு, மூன்று மாதங்களில் கொண்டுவரவிருக்கும் இந்த அரசியல் அமைப்பு தமிழ் மக்கள் காலாதி காலமாகத் தெரிவித்து வந்த அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய அரசியல் தீர்வாக அமைய வேண்டும் என்பது தொடர்பில் சிங்கள மக்களுக்கு விளங்கப்படுத்தியிருக்க வேண்டும்.
அதற்கு மாறாகத் தற்போது சிங்களத் தலைமைகள் தங்களுடைய சொந்த மக்களுக்கே கூறி வரும் வாக்குறுதி ஒரு ஒற்றையாட்சித் தீர்வு மாத்திரம் தான் வழங்கப்படும் என்பதேயாகும். இவ்வாறான நிலையில் தான் இன்றைய பேரணி யாழ்ப்பாணத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெறுகிறது. இந்தப் பேரணி யுத்தமொன்றை நடாத்தி இனத்தையே அழித்த நிலையில் அந்த அழிவுக்கு நீதி கேட்டுக் கொண்டிருக்கும் ஒரு நிலையில் இடம்பெறுகிறது.
அவர்கள் யுத்தம் மூலமாக எங்களுடைய முதுகெலும்பை உடைத்து எங்களை அமைதியாக்க முடியும் எனக் கருதினார்கள். ஆனால், இந்தப் பேரணியூடாக நாங்கள் மிகவும் தெளிவானதொரு செய்தியை வழங்கியிருக்கிறோம். எம்முடைய அரசியல் அமைப்பில் எங்களுடைய அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யாது விடில் இந்தப் பேரணி வளரும். இந்தப் பேரணி யாழ்ப்பாணத்தில் மட்டுமல்லாமல் தமிழர் தாயகத்திலுள்ள ஒவ்வொரு இடத்திற்கும் செல்லும். புலம்பெயர்ந்து வாழும் மக்கள், தாயகத்தில் வாழும் மக்கள் அனைவரது மத்தியிலும் இவ்வாறான பேரணி வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும்.” என்றுள்ளார்.

0 Responses to உரிமைகளை வெற்றி கொள்வதற்கு அரசியல் தலைவர்களை மாத்திரம் நம்பியிருக்க முடியாது: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்