Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஹைட்டி தலைநகர் போர்ட் ஔ பிரின்ஸ் இற்கு அண்மையிலுள்ள சிறைச்சாலை ஒன்றில் இருந்து 172 கைதிகள் ஒரு காவலாளியை சுட்டுக் கொன்று விட்டு போலிஸ் ஆயுதங்களுடன் தப்பிச் சென்றிருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் குறித்த அர்காஹேயே சிறையின் அதிகாரி போல் கொல்சொன் சனிக்கிழமை அளித்த செய்தியில் ஒரு காவலாளி கொல்லப் பட்டதையும் மேலும் இரு போலிஸ் அதிகாரிகள் காயம் அடைந்ததையும் உறுதிப் படுத்தியதாக லே நொவெல்லிஸ்டே பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

சுவர் ஏறிக் குதிக்க முயன்ற கைதி ஒருவர் கீழே விழுந்து மரணம் அடைந்ததாகவும் மேலும் இரு கைதிகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த சிறைத் தகர்ப்பு தப்பி ஓட்டத்துக்கு பின்புலமாக இருந்து செயற்பட்ட சூத்திரதாரியான யுவெனெர் கரெலுஸ் என்பவன் கைது செய்யப் பட்டிருப்பதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. இந்நபர் சிறைச்சாலைக்கு உள்ளே இருந்தவாறு சிறைத் தகர்ப்புக்குத் திட்டமிட்டு செயற்பட்டதாலேயே பிடிபட்டான் எனவும் தெரிய வருகின்றது. தற்போது ஹைட்டி முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது. இந்த சிறைத் தகர்ப்பு குறித்து கருத்துத் தெரிவித்த மனித உரிமைகள் ஆர்வலர் பியெர்ரே எஸ்பெரான்ஸே தப்பிச் சென்ற கைதிகளில் பலர் திருட்டு, கற்பழிப்பு, ஆள்கடத்தல் மற்றும் போதை மருந்து கடத்தல் போன்ற முக்கிய குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என்றுள்ளார்.

தப்பி ஓடிய கைதிகளை வேட்டையாடும் பாரிய செயற்பாட்டில் போலிஸ் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அர்கஹாயே சிறைச்சாலைக்கு அண்மையில் உள்ள அர்காடின்ஸ் கடற்கரையோரமாக உள்ள அனைத்து பாதைகளும் இடைமறிக்கப் பட்டு  சோதனையில் ஈடுபடுத்தப் பட்டுள்ளன. ஹைட்டி அரசு இந்த சிறைத் தகர்ப்பை வன்மையாகக் கண்டித்துள்ளது.

0 Responses to ஹைட்டி சிறையில் இருந்து 172 கைதிகள் தப்பி ஓட்டம் : 2 பேர் பலி: அறிக்கை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com