Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இராணுவத்தினரிடம் சரணடைந்த நிலையில் படுகொலைசெய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிப் போராளி ஒருவரின் குடும்பத்திற்கு முன்னாள் இராணுவ அதிகாரியான லெப்டினன்ட் விமல் விக்ரமகே, 20 இலட்ச ரூபாய் நஷ்டஈடு செலுத்தியுள்ளார்.

நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய இந்த நஷ்டஈட்டை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன முன்னிலையிலேயே நேற்று செவ்வாய்க்கிழமை முன்னாள் இராணுவ அதிகாரி செலுத்தியிருக்கின்றார்.

யாழ்ப்பாணம் பருத்தித்துறையிலுள்ள இராணுவ முகாமில் கைதுசெய்யப்பட்டிருந்த ரொபட் வோலிண்டன் என்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளியை 1998ஆம் ஆண்டு சுட்டுக்கொன்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரியான விமல் விக்கிரமகே, முன்னாள் போராளியின் குடும்பத்திற்கு 20 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

விமல் விக்கிரமகே என்ற முன்னாள் இராணுவ அதிகாரிக்கு பத்து ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை வழங்கிய நீதிபதி, இறந்த போராளியின் உறவினர்களுக்கு 20 இலட்சம் ரூபாய் இழப்பீடை பெற்றுக் கொடுக்குமாறும் உத்தரவிட்டிருந்தார். இதற்கமையவே நேற்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன முன்னிலையில், முன்னாள் படை அதிகாரி 20 இலட்சம் ரூபாய் இழப்பீட்டை வழங்கினார்.

படுகொலைசெய்யப்பட்ட முன்னாள் போராளியின் மனைவி மறுமணம் செய்திருப்பதால் அவருக்கு பத்து இலட்சம் ரூபாவும், முன்னாள் போராளியின் தந்தைக்கு பத்து இலட்சம் ரூபாவும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

இந்த இழப்பீட்டீற்கான நிதியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணி திரட்டிக்கொடுத்துள்ளனர். எனினும், முன்னாள் படை அதிகாரிக்கான இந்த நிதி திரட்டல் நடவடிக்கையிலும் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தாய்நாட்டுக்கான படையினர் அமைப்பு  குற்றஞ்சாட்டியுள்ளது.

0 Responses to சரணடைந்த முன்னாள் போராளியை படுகொலை செய்த இராணுவ வீரர் 20 இலட்ச ரூபாய் நஷ்டஈடு செலுத்தினார்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com