Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கொழும்பு துறைமுக நகர திட்டத்தால் கொழும்பு மற்றும் நீர்கொழும்பு பகுதி மீனவர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்படும் மீனவர்களின் பிரச்சினைகளை நிவர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் பேராயர் நேற்று செவ்வாய்க்கிழமை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “கொழும்பு துறைமுக நகரின் நிர்மாணப் பணிகளுக்காக நீர்கொழும்பு மற்றும் திக்கோவிட்ட ஆகிய பகுதிகளில் மணல் அகழப்படுகிறது. இதனால் கரையோரப் பகுதிகளில் ஏற்படும் பாரிய சூழல் சேதம் பற்றி மீனவ அமைப்புக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

இவ்வாறு மேற்கொள்ளப்படும் செயற்பாட்டால் மீன்களின் இனப்பெருக்கத்திற்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலை குறித்து நான் மிகவும் கவலைப்படுகின்றேன். கரையோரப் பகுதிகள் ஏற்கனவே மீன்கள் முட்டையிடும் பகுதிகளாக உள்ளன. இவ்வாறு மணல் அகழப்படுவதால் கடுமையாக சூழல் பாதிக்கப்படுவதோடு மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகின்றது.

இந்நிலை குறித்து ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் இவ்வேண்டுகோளை முன்வைக்கின்றேன். இவ்விடயத்தை மீளாய்வு செய்ய வேண்டுமெனவும் பாதிக்கப்பட்ட மீனவர்களோடு உரையாட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கின்றேன்.

தென்கொழும்பு பகுதிகளில் மண்ணரிப்பு ஏற்படுவதை ஏற்கனவே நான் தெரிவித்திருந்தேன். இதற்கிணங்க பாதிக்கப்பட்டிருக்கும் மீனவர்கள் மற்றும் அதிகாரிகளேடு இணைந்து கலந்துரையாடவும் அழைப்புவிடுக்கின்றேன்.

சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு செய்யாமல் முன்னைய அரசினால் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தாமதிக்காமல் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு செயற்படுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.” என்றுள்ளார்.

0 Responses to கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தினால் மீனவர்கள் பாதிப்பு: பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com