Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய நாடுகள், பொதுநலவாயம் உள்ளிட்ட சர்வதேச நாடுகளுடனும் சமூகத்துடனும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வளர்ந்திருந்த குரோதத்தை புதிய அரசாங்கம் மாற்றியமைத்து, நட்புறவை வளர்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற மைதானத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,  “பத்திரிகை ஒன்றில் தற்போதுள்ள அரசாங்கம் இரண்டு வருட காலத்தில் என்ன செய்தது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேள்வி எழுப்பியிருந்தார்.  அவர்களால் செய்ய முடியாத அனைத்தையும் நாங்கள் செய்துள்ளோம்.

சர்வதேச நாடுகளோடும் ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாய அமைப்புகளுடனும் குரோதத்தை வளர்த்துக்கொண்டு சர்வதேச நட்புறவை இழந்திருந்த எமது நாட்டை மீண்டும் உலக நாடுகளுடன் இணைக்க முடிந்துள்ளது என்பதே எனது பதிலாகும்.

மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் பதவியேற்று 2005ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை என்ன செய்தது என்பது எமக்கு தெரியும்.

அரசாங்கத்தை கொண்டு நடத்த முடியாமல் ரணில் விக்ரமசிங்கவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ததையும், ஐக்கிய தேசியக் கட்சியின் 21 பேரை வாங்கி அவர்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்கியதையும் மஹிந்த ராஜபக்ஷ மறந்துவிட்டாரா? அவர்களுடைய இரண்டு வருட காலத்தில் அவர்களால் செய்ய முடியாததை எமது அரசாங்கம் இந்த இரண்டு வருடங்களில் செய்துள்ளது.

அரசாங்கத்தை கொண்டு நடத்த முடியாமல் அமைச்சர் மங்கள சமரவீரவை அரசாங்கத்திலிருந்து விலக்கி அவர்கள் செய்த சூழ்ச்சிகளை மஹிந்த ராஜபக்ஷ இப்போது மறந்து பேசுகின்றார்.” என்றுள்ளார்.

0 Responses to மஹிந்த வளர்த்துவிட்ட சர்வதேச முரண்பாடுகளுக்கு புதிய அரசாங்கம் தீர்வு கண்டுள்ளது - ஜனாதிபதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com