இலங்கையின் 69வது சுதந்திர தினமான எதிர்வரும் 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04ஆம் திகதி முதல் தகவல் அறியும் உரிமைச் சட்டம் அமுலுக்கு வரவுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவுக்கும் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே ஊடக பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஊழல் மோசடிகளை இல்லாதொழிக்கவும், நல்லாட்சிக்கு மிக முக்கியமாக தேவைப்படுகின்ற சட்டமூலமாகவும் கருதப்படும் தகவல் அறியும் சட்டமூலத்தை அமுல்படுத்துவதாக, கடந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
குறித்த சட்டமூலம் தொடர்ந்து இழுபறியில் இருந்து வந்த நிலையில், அண்மையில் பாராளு மன்றில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றிக்கொள்ளப்பட்டது. இதுகுறித்து பல உலக நாடுகள் இலங்கைக்கு பாராட்டு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to 69வது சுதந்திர தினம் முதல் தகவல் அறியும் உரிமைச் சட்டம் அமுல்!