Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்தார்.

தமிழக முதல்வர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், முதல்வரின் இலாக்காக்களை நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கவனிப்பார் என்று, தமிழக ஆளுநர் அதிகாரப் பூர்வமாக அறிவித்தார்.இதையடுத்து, அமைச்சர்கள் தலைமைச் செயலகம் வந்து அவரவர் அலுவல்களை கவனித்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்துவத்துத் தொடர்பாக பிரதமரை சந்தித்து அவரிடம் முறையிட திமுக,கூட்டம் கூட்டி முடிவெடுத்தது. 

இதையடுத்து, ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்த ஸ்டாலின், சிறப்பு சட்டப்பேரவையைக் கூட்டி, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் தர தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தியதாகத் தெரிவித்தார்.பன்னீர் செல்வமும் இதற்கு ஒத்துழைப்புத் தருவார் என்கிற நம்பிக்கை உள்ளது என்றும் ஸ்டாலின் மேலும் தெரிவித்தார்.

0 Responses to தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்- நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சந்திப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com