தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ததால், வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இரவில் கனமழை கொட்டியது. பரவலாக பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவையில் தொடர்ந்து வெயில் வாட்டி வந்த நிலையில் நேற்றிரவு 2 மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வழிந்தோடியது. பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் பல இடங்களில் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் உருவானது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சுற்றுவட்டாரத்தில் நீண்ட நாட்களுக்கு பின் பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதே போல் சிவகாசி சுற்றுவட்டாரத்திலும் நேற்றிரவு கனமழை பெய்தது.
இதனால் தாழ்வான பகுதிகளில் இருந்த தொழில் நிறுவனங்கள், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதியடைந்தனர். கொடைக்கானல், ஒட்டன்சத்திரம், கம்பம் தேனி உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. இதே போன்று சாத்தூர், திருப்பூரிலும் மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் குறைந்தது.

0 Responses to தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை - வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்