Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முகநூலில் பிரதமர் மோடியைப் பற்றி தவறான விமர்சனம் செய்ததால் பள்ளித் தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலம், மீரட் அருகேயுள்ள சாரத்னா பகுதியை சேர்ந்தவர் முடாசிர் ரானா. இங்குள்ள ஒரு தனியார் பள்ளியின் தலைமையாசிரியராக இருக்கும் இவர் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத், யோகாசன குரு பாபா ராம்தேவ் ஆகியோரைப் பற்றி, அவதூறாகவும், தரக்குறைவாகவும், தவறான முறையிலும் முகநூலில் விமர்சித்ததாகத் தெரிய வருகிறது. 

இதுக் குறித்துப் போலீசாருக்கு புகார்கள் வந்தன.இதையடுத்து, முடாசிர் ரானாவை நேற்று கைதுசெய்த போலீசார், ஒருமைப்பாட்டுக்கு எதிரான செயலில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

0 Responses to முகநூலில் பிரதமர் மோடியைப் பற்றி தவறான விமர்சனம்: பள்ளி தலைமையாசிரியர் கைது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com