Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பாதுகாப்புப் படையினரை பலவீனப்படுத்துவதற்கோ அல்லது களங்கத்தை ஏற்படுத்துவதற்கோ பாதுகாப்பு அமைச்சர் என்கிற ரீதியில் தான் இடமளிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் மூன்று முன்னாள் கடற்படைத் தளபதிகள் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லப்பட்ட சம்பவத்துடன் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் தன்னால் உடன்பட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை  நடைபெற்ற ‘சத்விரு சங்கிந்த’ வீடு மற்றும் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

நாட்டின் சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாத்து ஊழல் மோசடிகள் அற்ற நாட்டை உருவாக்குவதற்காக நிறுவப்பட்டுள்ள நிறுவனங்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலில் செயற்படக்கூடாது. ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அது தொடர்பாக ஆராய்ந்து பார்க்கக்கூடிய முறைமையொன்று இருக்கின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இராணுவ, விமானப்படை, கடற்படை உறுப்பினர்களை அரசியல் கைப்பொம்மைகளாக ஆக்கக்கூடாதென அனைவரையும் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி உண்மையிலேயே நாட்டை நேசிக்கும், தேசிய பாதுகாப்பை மதிக்கும் எவரும் அவ்வாறு செய்யமுடியாதென்று மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to பாதுகாப்புப் படையினருக்கு களங்கத்தை ஏற்படுத்த இடமளிக்கப் போவதில்லை: ஜனாதிபதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com