யாருமே எதிர்பார்த்திர விதத்தில் இலக்கியத்துக்கான நோபல் பரிசினை அமெரிக்காவின் பிரபல பாடகர் பாப் டிலானுக்கு வழங்கப் படும் என சுவீடனின் நோபல் கமிட்டி அறிவித்துள்ளது. பாப் டிலன் அமெரிக்காவின் புகழ்பெற்ற ராக் மற்றும் நாட்டுப்புற இசைப் பாடகர் மட்டுமன்றி இசையுலகில் சிறந்த ஆளுமையுடன் அதிகளவு ரசிகர் வட்டத்தையும் கொண்டுள்ளார்.
யுத்தத்தை எதிர்த்தும் பொது மக்கள் உரிமைகள் இயக்கத்துக்கு ஆதரவாகவும் 1960 ஆம் ஆண்டுகளில் இவரது இசையில் ஒலித்த 'The times, they are a changin', 'Blowing in the wind', 'Like a Rolling Stone' போன்ற பாடல்கள் மிகவும் பிரசித்தமானவை. இந்நிலையில் அமெரிக்க பாடல் சம்பிரதாயத்துக்குள் புதிய கவித்துவங்களைப் புகுத்தியதற்காகவே 75 வயதாகும் போப் டிலானுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப் படுவதாக நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது. 1941 ஆம் ஆண்டு பிறந்த போப் டிலானின் இயற்பெயர் ராபர்ட் ஆலன் ஸிம்மர்மான் என்பதாகும்.
மனிதனின் சமூக சூழ்நிலைகள், மதம், அரசியல், காதல் மற்றும் அன்பு ஆகியவற்றை உள்ளடக்கமாகக் கொண்டு இவரது பல இசைத் தொகுப்புக்கள் வெளி வந்துள்ளன. இதுதவிர ஓவியராக, நடிகராக, திரைக்கதையாசிரியராக பன்முக திறமை உடையவர் போப் டிலான். 1989 ஆம் ஆண்டு வெளியான Oh Mercy, 1997 ஆம் ஆண்டு வெளியான Time out of mind மற்றும் 2006 இல் வெளியான Modern times ஆகிய இவரது படைப்புக்கள் மாஸ்டர் பீஸ் என்று கருதப் பட்டதுடன் புகழின் உச்சிக்கே இவை போப் டிலானைக் கொண்டு சென்றன.
இன்றுடன் இவ்வருடத்துக்கான அனைத்து நோபல் பரிசுளும் அறிவிக்கப் பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to இலக்கியத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவின் பிரபல பாடகர் பாப் டிலானுக்கு அறிவிப்பு