உலகின் மிக நீண்ட காலம் மன்னராக ஆட்சி புரிந்த தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் இன்று வியாழக்கிழமை காலமாகி உள்ளார். 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த பூமிபால் மறையும் போது அவரது வயது 88 ஆகும். சமீப காலமாகவே உடல் நலக் குறைவு காரணமாக தொடர் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சைப் பலன் இன்றி மரணமடைந்ததை அடுத்து தாய்லாந்து மக்கள் கடும் சோகத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
ஏற்கனவே அவர் சிகிச்சை பெற்று வந்த வைத்திய சாலை முன்பு அவர் பூரண குணம் அடைய வேண்டி பல பொது மக்கள் பிரார்த்தனை செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சிரிராஜ் மருத்துவ மனையில் பிற்பகல் 3:52 மணிக்கு அவர் உயிர் பிரிந்ததாக தாய்லாந்து அரண்மணை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. பூமிபால் மறைவை அடுத்து தாய்லாந்தின் புதிய மன்னராக மகா வஜ்ஜிரலாங்கோன் தேர்வு செய்யப் பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
தன் ஆட்சிக் காலத்தில் பெரும்பாலான இராணுவப் புரட்சிகளை வெற்றிகரமாக சந்தித்த பூம்பால் அரசியலைத் தாண்டி தாய்லாந்தின் உயர்ந்த தலைவராக பல மக்களால் கருதப் படுகின்றார். இவரால் தாய்லாந்தில் ஸ்திரத்தன்மை பல காலமாகப் பேணப் பட்டுள்ளது. தாய்லாந்தில் உள்நாட்டு ஊடகங்களோ அல்லது வெளிநாட்டு ஊடகங்களோ அரசரைப் பற்றி முழுமையாக செய்தி வெளியிட முடியாத வண்ணம் கடும் கட்டுப் பாடுகள் உள்ள போதும் மக்களிடையே பூமிபாலுக்கு உண்மையான செல்வாக்கு அதிகளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனால் இவர் அரச பதவி ஏற்ற போது இருந்ததை விட இவரது மரணம் தாய்லாந்தில் இனிமேலும் மன்னராட்சிக்கு வலுச் சேர்க்கக் கூடும் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

0 Responses to உலகின் மிக நீண்ட காலம் மன்னராக ஆட்சி புரிந்த தாய்லாந்தின் பூமிபால் மறைவு