Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

செப்டம்பரில் தனது 5 ஆவது அணுவாயுதப் பரிசோதனையை வட கொரியா மேற்கொண்டதை அடுத்து அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து அடுத்த மாதம் போர் ஒத்திகையில் ஈடுபடவுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. வடகொரியா தொடர்ச்சியாக அணுவாயுத மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்ததுடன் தேவைப் பட்டால் அமெரிக்கா மீதும் தென்கொரியா மீதும் அணுவாயுதத் தாக்குதல் நடத்த தயங்க மாட்டோம்  என எச்சரிக்கையும் விடுத்திருந்தது.

இதற்குப்  பதிலடியாகவே கொரிய தீபகற்பத்தில் அடுத்த மாதம்  போர் ஒத்திகை நடைபெறவுள்ளது. இந்தப் போர் ஒத்திகைக்கு சிவப்புக் கொடி என்றும் பெயரிடப் பட்டுள்ளது. அமெரிக்க மற்றும் தென்கொரிய விமானப் படை விமானங்களும் பங்கேற்கவுள்ள இந்த ஒத்திகை முக்கியமாக வடகொரியாவின்  அணுசக்தி நிலையங்களைத் தாக்கி அழிக்கும் வகையில் திட்டமிடப் பட்டதாக இருக்கும் எனத் தெரிய வருகின்றது.

0 Responses to போர் ஒத்திகையில் ஈடுபடவுள்ள அமெரிக்காவும் தென்கொரியாவும்..

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com