Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உலக நாடுகளில் தொழில் தொடங்க சிறந்த நாடு என்ற பெருமையை உலக வங்கி நியூசிலாந்துக்கு வழங்கியுள்ளது. 2017 ஆம் ஆண்டு தொழில் தொடங்க ஏற்ற நாடுகள் என்ற உலக வங்கி வெளியிட்ட பட்டியலில் 10 வருடங்களாக முதலாம் இடத்தில் இருந்த சிங்கப்பூரை பின்னுக்குத் தள்ளி நியூசிலாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொழில் தொடங்க சட்ட சிக்கல்கள் குறைவு மற்றும் குறுகிய காலத்தில் தொடங்க முடியும் போன்ற காரணங்களால் நியூசிலாந்து இப்பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது என்றும் கூறப்படுகின்றது. உலக வங்கி வெளியிட்ட இந்த பட்டியலில் 2 ஆம் இடத்தில் சிங்கப்பூரும் 3 ஆவது இடத்தை டென்மார்க்கும் பிடித்துள்ளன. ஹாங்கொங் 4 ஆவது இடத்திலும் இதற்கடுத்த இடங்களில் முறையே தென் கொரியா மற்றும் நோர்வே ஆகிய நாடுகளும் உள்ளன.

7 ஆம் இடத்தில் இருந்த அமெரிக்கா 8 ஆம் இடத்துக்கும் 34 ஆம் இடத்தில் ஜப்பானும் சீனா 84 ஆம் இடத்திலிருந்து 78 ஆம் இடத்துக்கு முன்னேறியும் உள்ளன. இந்தியா 130 ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to நியூசிலாந்தை தொழில் தொடங்க சிறந்த நாடாக உலக வங்கி அறிவிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com