ஆப்கானிஸ்தானின் மஸார் ஈ ஷெரீஃப் நகரிலுள்ள ஜேர்மன் தூதரகம் மீது வெடிபொருட்கள் நிரம்பிய டிரக்கை ஓட்டி வந்து தலிபான்கள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 4 பேர் பலியாகி இருப்பதுடன் நூற்றுக் கணக்கானவர்கள் படுகாயம் அடைந்தும் உள்ளனர்.
காயம் அடைந்தவர்களில் பலரது நிலமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகின்றது. வியாழக்கிழமை இரவு 11 மணிக்கு இத்தாக்குதல் நிகழ்த்தப் பட்டுள்ளது. முன்னதாக கடந்த வாரம் குண்டூஸ் மாகாணத்தில் உள்ள கிராமம் ஒன்றின் மீது அமெரிக்க விமானங்கள் நடாத்திய வான் தாக்குதலில் பல சிறுவர்களுடன் 30 இற்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப் பட்டதற்குப் பலி வாங்கும் விதமாக தலிபான்களின் இந்தத் தாக்குதல் அமைந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. இச்சம்பவத்துக்கு ஜேர்மன் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இத்தாக்குதலில் ஜேர்மன் தூதரகத்தின் முக்கிய கவுன்சிலர்கள் யாரும் பலியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வடக்கு ஆப்கானிஸ்தானில் தீவிரவாதத்துக்கு எதிராக யுத்தத்தில் ஈடுபட்டு வரும் சர்வதேச நாடுகளில் ஜேர்மனி முக்கிய பங்கு வகித்து வருவதும் நோக்கத்தக்கது.
வடக்கு ஆப்கானிஸ்தானில் சர்வதேசத்தை வழிநடத்தும் 850 ஜேர்மன் துருப்புக்கள் பணியாற்றி வருகின்றன.

0 Responses to ஆப்கான் ஜேர்மன் தூதரகம் மீது தலிபான்கள் தாக்குதல் 4 பேர் பலி