மொத்தம் 100 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தால் அதில் 86 நோட்டுக்கள் 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் என்று, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரம், மத்திய அரசின் அறிவிப்பு வரவேற்கத் தக்கதுதான் என்றாலும்,, இதற்கான மாற்று வழிகளில் மக்கள் கடுமையான சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். பால், அரிசி, காய்கறி என்று அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதில் மக்களுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதற்கு மத்திய அரசு கையாளும் நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை.
அடுத்து 2 ஆயிரம், 500 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் வரும் என்கிற நிலையில், கறுப்புப் பணத்தை ஒழிப்பது என்பது எப்படி சாத்தியம் என்றும் தெரியவில்லை என்று கூறியுள்ள ப.சிதம்பரம், தற்போது மொத்தமாக 100 நோட்டுக்கள் புழக்கத்தில் உள்ளன என்றால், அதில் 86 நோட்டுக்கள் 1000 ரூபாய் 500 ரூபாய் நோட்டுக்கள் என்பதால்தான் மக்கள் இத்தனை சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதை மத்திய அரசு சிந்தித்து மாற்று வழிகளை எளிமைப் படுத்தி இருக்க வேண்டும் என்று மேலும் கூறியுள்ளார்.

0 Responses to மொத்தம் 100 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தால் 86 நோட்டுக்கள் 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள்: ப.சிதம்பரம்