பொலிவியாவிலிருந்து கொலம்பியா நோக்கியப் பயணித்த பயணிகள் விமானம் ஒன்று திங்கட்கிழமை இரவு கொலம்பியாவின் மெடெலின் நகருக்குச் சமீபமாக விபத்துக்குள்ளாகியதில் 75 பேர் பலியாகியுள்ளார்கள்.
72 பயணிகள், 9 விமானப் பணியாளர்கள் என 81 பேருடன் பயணித்த இவ் விமானம், LAMIA நிறுவனத்துக்குச் சொந்தமான சிறிய ரக பயணிகள் விமானமாகும். கொலம்பியாவின் பொகோத்தா Cerro Gordo மலைப்பிரதேசத்தில் விபத்தில் சிக்கிய இவ் விமானத்தின் சிதைவுகளுக்குள்ளிருந்து, 6 பேரை உயிருடன் மீட்டெடுத்துள்ளனர் மீட்புப் படையினர். இவ்வாறு மீட்கப்பட்ட அறுவரில் ஒருவர் பின்னர் உயிரிழந்திருப்பதாக பிந்திய செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to கொலம்பியா விமான விபத்து - 75 பேர் பலி