திங்கட்கிழமை மாலை அளவில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த உதைப்பந்தாட்ட கிளப் வீரர்களுடன் சென்ற விமானம் ஒன்று கொலம்பிய நாட்டிலுள்ள மலைகளில் மோதி விபத்தில் சிக்கியதில் 76 பேர் கொல்லப் பட்டதாகவும் 5 பேர் உயிருடன் மீட்கப் பட்டதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.
பிரேசில் நேரப்படி இரவு 10 மணியளவில் குறித்த லாமியா ஏர்லைன்ஸ் விமானம் அவசர நிலையைப் பிரகடனம் செய்ததுடன் விமானத்தில் மின்னுபகரண பழுது ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப் பட்டது.
இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில் கொலம்பியாவிலுள்ள மெடெல்லின் என்ற நகருக்கு அண்மையில் மலைப் பகுதியில் மோதி விமானம் நொறுங்கியுள்ளது. பிரேசில் உதைப்பந்தாட்ட கிளப்பான சப்பெகோயென்ஸே ரியல் ஐ சேர்ந்த வீரர்களே குறித்த விமானத்தில் பயணித்திருந்ததுடன் புதன்கிழமை கொலம்பியாவின் அட்லெட்டிக்கோ நாசியொனல் கிளப்புடன் கோபா தென்னமெரிக்க இறுதிப் போட்டியிலும் இவர்கள் விளையாட இருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்விமானத்தில் 72 பயணிகளும் 9 விமானப் பணியாளர்களும் பயணித்துள்ளனர்.
காப்பாற்றப் பட்டவர்களில் ஒருவர் 27 வயதுடைய அலன் ருஷெல் என்றும் இவர் பிரேசில் உதைப்பந்தாட்ட குழுவின் களத்தடுப்பு வீரர் என்றும் கொலம்பியாவி சிவில் ஏரோனொட்டிக்கல் ஏஜன்ஸி தெரிவித்துள்ளது. அவசர நிலை பிரகடனப் படுத்தப் பட்டவுடன் லாமியா ஏர்லைன்ஸ் விமானம் விபத்தில் சிக்கும் வாய்ப்பை அறிந்திருந்த கொலம்பிய சிவில் ஏரோனொட்டிக்கல் ஏஜன்ஸி உடனடியாக விபத்தில் சிக்குபவர்களைக் காப்பாற்ற ஒரு குழுவைத் தயார் செய்து வைத்ததுடன் விபத்து இடம்பெற்ற பகுதிக்கு விரைந்து சென்றும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

0 Responses to பிரேசிலின் உதைப்பந்தாட்ட கிளப் வீரர்களுடன் சென்ற விமானம் விபத்து! : 76 பேர் பலி