யாழ். பல்கலைக்கழக மாணவர் விடுதியினுள் நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை “சுட்டுக் கொல்வோம்” என்று பொலிஸார் அச்சுறுத்தி சென்றுள்ளனர்.
இது தொடர்பில் யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவரான ரஜீவன் தெரிவித்துள்ளதாவது, “யாழ்.பல்கலைகழகத்தை சேர்ந்த மாணவன் ஒருவனின் பிறந்தநாளை நள்ளிரவு கொண்டாட ஏற்பாடுகள் செய்திருந்தோம். அந்தவேளை திடீரென பல்கலைகழக விடுதியினுள் ஆயுதங்களுடன் நுழைந்த பொலிஸார் எம்மை அச்சுறுத்தினர்.
அவ்வேளை பல்கலைகழக விடுதியினுள் எவ்வாறு அத்துமீறி ஆயுதங்களுடன் உள்நுழைவீர்கள்? என கேட்ட சக மாணவன் ஒருவனை நோக்கி துப்பாக்கியை நீட்டி “உங்களை சுட்டுக்கொன்று விட்டு போயிடுவோம்” என மிரட்டி இருந்தார்கள். அத்துடன் சக மாணவன் ஒருவனின் தகவல்களையும் எம்மை மிரட்டி பெற்று சென்றனர்.” என்றுள்ளார்.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கடந்த மாதம் 20ஆம் திகதி பொலிஸாரினால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இந்தச் சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், மீண்டும் பொலிஸார் யாழ். பல்கலைக்கழக மாணவர்களை அச்சுறுத்திச் சென்றமை பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 Responses to “சுட்டுக் கொல்வோம்” என்று கூறி யாழ். பல்கலைக்கழக மாணவர்களை அச்சுறுத்திய பொலிஸார்!