தமிழகத்தின் மாநகராட்சி வரி வசூலில் சென்னை மாநகராட்சி முதலிடம் பிடித்துள்ளது. நவம்பர் 8ம் தேதி, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் வரிவசூல் குவியத் தொடங்கியுள்ளது. நவம்பர் 11ம் தேதியிலிருந்து இன்று வரை மாநகராட்சிகள் வரிவசூல் செய்துள்ள புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டள்ளன.
இந்த பட்டியலில், சென்னை மாநாகராட்சி 58.33 கோடி ரூபாய் வசூலித்து முதலிடத்தில் உள்ளது. அதை தொடர்ந்து, கோவை மாநாகராட்சி 41.81 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் நவம்பர் 11ம் தேதியில் இருந்து இன்று வரை மொத்தமாக 167.86 கோடி ரூபாய் வரி வசூலாகி உள்ளது.

0 Responses to வரி வசூலில் சென்னை மாநகராட்சி முதலிடம்..