அண்மையில் நெதர்லாந்தில் வளர்க்கப் பட்டு வந்த இலட்சக் கணக்கான வாத்துக்களுக்குப் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப் பட்டு அவை அழிக்கப் பட்டிருந்தன.
இதைத் தொடர்ந்து ஜப்பானிலும் பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் இருப்பது இனம் காணப்பட்டு சுமார் 330 000 பறவைகளை அழிக்க முடிவெடுக்கப் பட்டுள்ளது. H5 வைரஸால் பாதிக்கப் பட்ட நிகாட்டா மாவட்ட பண்ணைகளில் உள்ள 320 000 கோழிகளையும் அமோரி மாவட்ட பண்ணைகளில் உள்ள 16 500 வாத்துக்களையும் அழிப்பதென முடிவு செய்யப் பட்டு செவ்வாய்க் கிழமை முதல் அப்பணி ஆரம்பிக்கப் பட்டுள்ளது.
இப்பகுதிகளில் இருந்து ஏனைய பண்ணைகளுக்கும் பறவைக் காய்ச்சல் கிருமி பரவாது தடுக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதுடன் பாதிக்கப் பட்ட பகுதிகளில் வர்த்தகம் மேற்கொள்ளப் பட தடையும் விதிக்கப் பட்டுள்ளது. இறுதியாக 2015 ஆம் ஆண்டும் ஜப்பானில் பறவைக் காய்ச்சல் இனம் காணப்பட்டு பெருந்தொகையான பறவைகள் அழிக்கப் பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஜப்பானிலும் பறவைக் காய்ச்சல் இனங் காணப்பட்டதை அடுத்து 330 000 பறவைகள் அழிப்பு