சவுதி அரேபியாவில் கடந்த பல ஆண்டுகளாகப் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்குத் தடைச் சட்டம் நிலவி வருகின்றது. இந்நிலையில் அண்மையில் சவுதி நாட்டின் இளவரசரும் கோடீஸ்வரருமான அல்வலீட் பின் தலாட் இதற்கு எதிராகக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
அதாவது இத்தடைச் சட்டம் சவுதி அரேபியாவின் பொருளாதாரத்தைப் பாதிப்பதாக அவர் கூறியுள்ளார். இது பொருளாதாரம் சார்ந்த பிரச்சினை மட்டுமல்லாது பெண்களின் அடிப்படை உரிமையும் என்பதால் இந்த தடைச் சட்டம் வாபஸ் பெறப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். உலகில் சவுதி அரேபியா மட்டுமே பெண்கள் வாகனம் ஓட்டுவதற்குத் தடை விதித்துள்ள ஒரேயொரு நாடாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இத்தடை சட்டத்துக்கு எதிராகக் கடந்த காலத்தில் குரல் கொடுத்து வந்த மகளிர் உரிமை ஆர்வலர்கள் கைது செய்யப் பட்டும் இருந்தனர்.
தற்போது சவுதி பெண்களின் இந்த உரிமைக்காகக் குரல் கொடுத்துள்ள இளவரசர் அல்வலீட் பின் தலாட் உலகின் செல்வந்தர்கள் பட்டியலில் உள்ளவர் என்ற போதும் சவுதி அரசியலின் பின்னணி எதுவும் இவருக்குக் கிடையாது எனவும் கூறப்படுகின்றது. இதேவேளை சவுதி அரேபியாவின் இத்தடைச் சட்டத்தால் வெளிநாட்டினர் கடுமையாகப் பாதிக்கப் படுவதுடன் சவுதி மக்களில் கூட சராசரிக் குடும்பம் ஒன்று கார் ஓட்டுனருக்காக மாதாந்தம் 3800 ரியால் செலவிடுவதாகவும் இளவரசர் தெரிவித்துள்ளார்.

0 Responses to பெண்கள் வாகனம் ஓட்ட மறுக்கும் சட்டம் சவுதியின் பொருளாதாரத்துக்குப் பாதிப்பு!: சவுதி இளவரசர் கருத்து