இலங்கை இன்று அனுபவிக்கும் சுதந்திரத்தின் பங்காளியாக கருணா அம்மான் என்கிற விநாயகமூர்த்தி முரளிதரன் இருக்கின்றார். அவரைக் கைது செய்தது தவறு என்று கூட்டு எதிரணி (மஹிந்த ஆதரவு அணி) தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரும், பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது, “கருணா, இருளில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தவர். பிழையான வழிகளைக் கைவிட்டு சரியான வழிக்கு வந்தவர். விடுதலைப் புலிகளை அழித்து நாம் இன்றைக்கு அனுபவிக்கும் சுதந்திரத்தின் பங்காளியாக இருந்தவர்.
இன்றைய அரசாங்கத்தில் அவர் நல்லிணக்க ஆலோசகராகவும், குறைந்த பட்சம் வெளிவிவகார அமைச்சருக்கு நெருக்கமான ருத்ரகுமாரன், சுரேன் சுரேந்திரனைப் போன்றவர்களைப் போல வரப்பிரசாதங்களை அனுபவித்திருக்கலாம். தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்டதாலேயே கருணா இன்று சிறை வைக்கப்பட்டுள்ளார்.” என்றுள்ளார்.

0 Responses to கருணா சுதந்திரத்தின் பங்காளி; அவரை கைது செய்தது தவறு: மஹிந்த