ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதி வழங்கினால் வவுனியா ஈச்சங்குளத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லத்தினை இராணுவம் விடுவிக்கும் என்று வன்னி இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ருவான் குலதுங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேனா ஹெட்டியாராட்சி ஆகியோர் அனுமதி வழங்கினால் மட்டுமே வன்னி பிரதேசத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை இராணுவம் விடுவிக்க முடியும். இராணுவம் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வன்னி இராணுவ கட்டளை தளபதிக்கும் தமிழ் விருட்சம் அமைப்பிற்குமிடையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

0 Responses to ஜனாதிபதி அனுமதி வழங்கினால் ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் விடுவிக்கப்படும்: வன்னி கட்டளைத் தளபதி