இராணுவம் உள்ளிட்ட முப்படையினரும் பெற்றுக் கொண்ட போர் வெற்றியை மஹிந்த ராஜபக்ஷவும், அவரது குடும்பத்தினரும் தமது ஊழல் மோசடிகளை மூடி மறைப்பதற்காக பயன்படுத்திக் கொண்டனர் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்றுவரும் 2017ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே வெளிவிவகார அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மங்கள சமரவீர மேலும் கூறியுள்ளதாவது, “போருக்குப் பின்னர் நாடு ஏகாதிபத்திய ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தது. 2009ஆம் ஆண்டு இராணுவம் வெற்றிகொண்ட யுத்தத்தை ராஜபக்ஷ குடும்பத்தினர் ஊழல், படுகொலைகளை மூடிமறைப்பதற்கு பயன்படுத்திக் கொண்டதோடு, பொய்யான தேசப்பற்றுத் திரையை ஏற்படுத்தி சர்வதேச ரீதியாக நாட்டிற்கு இருந்த நற்பெயரை கெடுத்தனர்.
தெளிவாக கூறவேண்டுமாயின், எமக்கு சார்பாக இருந்த சர்வதேச உறவு அந்த காலத்தில் இல்லாமல்போனது. எனினும் குறுகிய காலத்தில் அந்த உறவைக் கட்டியெழுப்ப எம்மால் முடிந்தது. வெளிநாட்டு பயணங்களுக்காக 2.3 பில்லியன் ரூபாய் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் செலவு செய்யப்பட்டுள்ளது.
முன்னைய ஆட்சி காலத்தில் வெளிநாட்டு இராஜதந்திரிகள் ராஜபக்ஷவின் அடிமைகளைப்போல் காணப்பட்டனர். வெளிவிவகார அமைச்சின் கன்சியூலர் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படாத நிலையில், கடந்த 2013ஆம் ஆண்டு அவருக்கென்று உத்தியோகபூர்வ இல்லம் ஒன்று வாடகைக்கு பெற்றுக்கொள்ளப்பட்டது.
கடந்த வருடம் ஜுலை மாதம் வரை அந்த வீட்டிற்கான வாடகை உள்ளிட்ட செலவு 27.6 மில்லியனுக்கும் அதிகமான நிதி செலவிடப்பட்டுள்ளது. அதிகாரி ஒருவர் இல்லாத நிலையில் வெறுமனே வீடு ஒன்றுக்கு இவ்வளவு நிதி செலவிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் அந்த வீட்டில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் புதல்வரே வசித்து வந்துள்ளார். அவரது பாதுகாப்பிற்கென இரண்டு இராணுவத்தினரும் அமர்த்தப்பட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது. வெளிவிவகார கொள்கை வெளிவிகார அமைச்சினால் தீர்மானிக்கப்படவில்லை. ஜனாதிபதி நியூயோர்க் சென்ற சமயத்தில் இங்கிலாந்தில் உள்ள நிறுவனமே அவரது உரையை தயார் செய்தது.
இதுவே அவர்களது வெளிவிவகார கொள்கை. ஆகவே சஜின்வாஸ் குணவர்தன பில்லியன் கணக்கில் கொள்ளையில் ஈடுபட்டுள்ளமை தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவை தொடர்பில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலும் பொறுப்புக்கூற வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to ராஜபக்ஷக்கள் தமது ஊழல் மோசடிகளை மூடி மறைக்க ‘போர் வெற்றி’யை பயன்படுத்தினர்: மங்கள