Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்காவில் அனைத்து விதமான அகதிகளும் உழ்நுழைவதற்கான அனுமதியை 120 நாட்களுக்குத் தற்காலிகமாக இடைநிறுத்தி ஓர் உத்தரவில் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டுள்ளார் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப்.

இதன் மூலம் முஸ்லிம் நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு செல்ல நினைப்பவர்களுக்கான சட்ட திட்டங்களைக் கடுமையாக்கத் திட்டமிட்டுள்ளார் டிரம்ப்.

இந்த உத்தரவுக்கான தனது இலக்கு பிரிவினை வாத இஸ்லாமிய தீவிரவாதிகளை வகைப்படுத்தி அவர்கள் அமெரிக்கவுக்குள் உழ்நுழைவதைத் தடுப்பதும் கிறித்தவர்கள் அமெரிக்காவில் உழ்நுழைவதற்கு முன்னுரிமை அளிப்பதும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். பெண்டகனில் இந்த உத்தரவில் கைச்சாத்திட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த டிரம்ப் எமது மண்ணில் தீவிரவாதிகள் வரத் தேவையில்லை. எமக்குத் தேவை எமது தேசத்துக்கு ஆதரவு தெரிவிப்பவர்களும் எமது மக்களை ஆழமாக நேசிப்பவர்களுமே என்று குறிப்பிட்டார். மேலும் சிரியா உட்பட மத்திய கிழக்கு நாடுகளில் சிறுபான்மை கிறித்தவர்கள் துன்புறுத்தப் படுவதாகவும் அவர்கள் அமெரிக்கா போன்ற தேசங்களுக்குச் செல்ல அனுமதிக்கப் படுவதில்லை என்றும் அதனால் தான் அவர்களுக்கு முன்னுரிமை எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் கையெழுத்திட்ட உத்தரவில் 7 முக்கிய முஸ்லிம் தேசங்களில் இருந்து அகதிகள் அமெரிக்கா செல்ல 90 நாட்களுக்கு விசா மறுக்கப் படும் செய்கையும் உள்ளடக்கப் பட்டுள்ளது. குறித்த 7 நாடுகளும் ஈரான், ஈராக், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா மற்றும் யேமென் என்பவை ஆகும். இதேவேளை குடிப்பெயர்வுக்கான சர்வதேச நிறுவனமான IOM உம் ஐ.நா அகதிகள் ஏஜன்ஸியும் யுத்தம் மற்றும் துன்புறுத்தல்களால் ஆப்பிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வெளியேறும் அகதிகளுக்கு அமெரிக்கா தொடர்ந்து அடைக்கலம் அளிக்க வேண்டும் என்றும் அதன் மீளக் குடியமைக்கும் திட்டம் மிக முக்கியமானது ஆகும் எனவும் சனிக்கிழமை வாஷிங்டனுக்கு வலியுறுத்தியுள்ளன.

கடந்த வருடம் UNHCR இன் திட்டப்படி ஆக்டோபருக்கும் டிசம்பர் இறுதிக்கும் இடையே அமெரிக்காவில் சுமார் 25 000 அகதிகள் மீளக் குடியேற்றப் பட்டிருந்தனர் என வெள்ளிக்கிழமை ஐ.நா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதேவேளை 2015 ஆம் ஆண்டு  அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருந்த பாகிஸ்தான் சிறுவர் புரட்சியாளரான மலாலா யூசுஃப்சாய் டிரம்பின் குறித்த உத்தரவு அகதிகளுக்கான கதவை அடைக்கும் எனக் கவலை தெரிவித்துள்ளார். டிரம்பின் உத்தரவுப்படி போரினால் கடுமையாகப் பாதிக்கப் பட்டு வரும் சிரிய அகதிகளுக்கு விசா மறுக்கப் படுவதுடன் தற்போது பரிசீலனையில் இருக்கும் விசா படிவங்களும் நிராகரிக்கப் படவுள்ளன. எல்லையில் காத்திருக்கும் அகதிகள் நிரந்தரமாக அமெரிக்காவில் குடியேறும் திட்டம் 4 மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமே முஸ்லிம்களை அமெரிக்காவுக்குள் வரவிடாமல் தடுக்கும் டிரம்பின் தனிப்பட்ட நோக்கமாகும். இந்நிலையில் உலகம் முழுதுமே தற்போது பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும் அமெரிக்கா அகதிகளையும், புலம் பெயர்ந்தவர்களையும் அரவணைக்கும் நாடு என்ற பெருமையை இழந்து தற்போது பின்னோக்கிச் சென்று விட்டதாகவும் மலாலா கருத்துத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to அமெரிக்காவில் அகதிகள் உழ்நுழைவதற்கான அனுமதியை 120 நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்திய டிரம்ப்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com