பாராளுமன்றத்தில் கடந்த ஒகஸ்ட் மாதம் நிறைவேற்றப்பட்ட காணாமற்போனோர் பணியகம் தொடர்பிலான சட்டத்தில் சில அம்சங்களை மாற்றுவது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு மீண்டும் ஜனாதிபதிக்கு சில பரிந்துரைகளைச் செய்துள்ளது.
காணாமற்போனோர் பணியகம் தொடர்பில் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு பல மாதங்களான போதும், அது வர்த்தமானியில் அறிவிக்கப்படவில்லை. அதற்கான கையெழுத்தினை இடுவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பின்னடித்து வருகின்றார்.
இந்த நிலையிலேயே, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி மீண்டும் சில திருத்தங்களைச் செய்வது தொடர்பில் கரிசனை வெளியிட்டுள்ளார்.
இதனிடையே, இந்த வாரத்தின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, காணாமற்போனோர் பணியகம் சட்டத்தினை விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரவுள்ளதாக தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to காணாமற்போனோர் பணியகம் தொடர்பிலான சட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மீண்டும் தலையீடு!