மஹிந்த ராஜபக்ஷ உண்மையிலேயே அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதற்கு தீர்மானித்திருக்கவில்லை. அவர் பொய் கூறுகின்றார் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன போட்டியிட முன்வராதிருந்தால், தான் அரசியலில் இருந்து ஓய்வுபெறவிருந்ததாகத் மஹிந்த ராஜக்ஷ தெரிவித்திருந்தார். ஐ.தே.கவின் ஜனாதிபதிகளும் ஸ்ரீ ல.சு.கவின் ஜனாதிபதிகளும், இரு முறை ஜனாதிபதியாக இருந்துவிட்டு, ஓய்வு பெற்றுச் சென்றுள்ளனர். மஹிந்த ராஜபக்ஷ மாத்திரம், அரசியலமைப்பின் 18வது திருத்தத்தை இரு வாரங்களுக்குள் கொண்டுவந்து, ஜனாதிபதியின் பதவிக் காலத்தை மாற்றினார். அரசியலிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ உண்மையிலேயே ஓய்வுபெறத் தீர்மானித்து இருந்தால், தொடர்ந்தும் பதவியில் இருப்பதற்காக அரசியலமைப்பை மாற்றம் செய்திருக்கத் தேவையில்லை”என்றுள்ளார்.

0 Responses to மஹிந்த பொய்யுரைக்கிறார்: ரணில்