அமெரிக்காவின் ஐக்கிய நாடுகளுக்கான தூதுவர் பதவியிலிருந்து சமந்தா பவரும், அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் பதவியிலிருந்து நிஷா தேசாய் பிஸ்வாலும் நீக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகள் 4 பேர், அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்று சில நாட்களுக்குள்ளேயே நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நால்வரும், இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல் விடயங்களில் கவனம் செலுத்தி வந்தவர்கள். குறிப்பாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கையின் பொறுப்புக் கூறல் விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி வந்தவர்கள். குறிப்பாக, குறித்த நால்வரில், சமந்தா பவரும், நிஷா தேசாய் பிஸ்வாலும் முக்கியமானவர்கள்.
அமெரிக்காவின் ஐக்கிய நாடுகளுக்கான தூதுவராக, 2013ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 05ஆம் திகதியிலிருந்து சமந்தா பவர் கடமையாற்றி வந்தார். அவரது இடத்துக்கு நிக்கி ஹெலிய் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.
2014ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் திகதியிலிருந்து ஐக்கிய அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவி இராஜாங்கச் செயலாளராக நிஷா தேசாய் பிஸ்வால், பதவி வகித்து வந்தார். இந்நிலையில், ஐக்கிய அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான புதிய உதவி இராஜாங்கச் செயலாளராக வில்லியம் ட்ரோட் நியமிக்கப்பட்டுள்ளார்.
சமந்தா பவர், நிஷா தேசாய் பிஸ்வால் ஆகியோரின் நீக்கம், இலங்கைக்கு சாதகமானதா பாதகமானதா என்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படுகின்றது. குறிப்பாக, ஜெனீவா அமர்வுகள் ஆரம்பிக்கவுள்ள நிலையில், புதிதாக பதவியேற்றுள்ள டொனல்ட் ட்ம்பின் அமெரிக்க ஆட்சிப்பீடம் இலங்கையை எவ்வாறு கையாளப் போகின்றது என்று நோக்கப்படுகின்றது.

0 Responses to ட்ரம்பின் அதிரடி தொடர்கிறது; சமந்தா பவர், நிஷா பிஸ்வால் நீக்கம்: தப்பிக்குமா இலங்கை?