தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்வதற்கு நோர்வேயில் இருக்கும் சிலரினாலேயே திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக ஜாதிக ஹெல உறுயமயின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான பட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
குறித்த திட்டத்தினை அறிந்து கொண்ட புலனாய்வுப் பிரிவினர் உரிய தரப்பிற்கு அறிவித்ததோடு, அதன் பின்னரே வடக்கில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் நால்வர் கைதுசெய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் போது எவ்வித விசாரணைகளும் கண்காணிப்பும் இன்றி விடுவிக்கப்பட்ட 12,600 முன்னாள் போராளிகள் உள்ளனர். அவர்கள் மீள ஒருங்கிணைய ஆரம்பித்துள்ளனர் என்றும் சம்பிக்க ரணவக்க மேலும் கூறியுள்ளார்.

0 Responses to எம்.ஏ.சுமந்திரனை கொல்வதற்கு நோர்வேயிலிருந்தே திட்டம் திட்டப்பட்டுள்ளது: சம்பிக்க ரணவக்க