புதிய அரசியலமைப்பினைத் தயாரிக்கும் பணிகளுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் முட்டுக்கட்டை போட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பினைத் தயாரிக்கும் பணிகளில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் இதுவரை இணைந்து இயங்கியமைக்கு மாறாக கருத்துக்களை கூறுவதற்கு தலைப்பட்டுள்ளனர். இதன்காரணமாக அரசியலமைப்பு தயாரிப்புப் பணிகளில் தடங்கல் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய அரசியலமைப்பு பணிகள் முற்றுமுழுதாக சுமுகமாக நிறைவடையும் என எதிர்பார்க்கவில்லை. இந்த தடங்கல்களை எதிர்கொள்ள வேண்டிய தேவையுள்ளதாகவும் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் சந்திப்பு கடந்த 26 ஆம் திகதி நடைபெற்ற போதிலும் எந்தவொரு கலந்துரையா டலும் இல்லாமல் அந்த சந்திப்பு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தமது முடிவை அறிவிப்பதற்கு மேலதிக கால அவகாசத்தை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைச்சர்கள் கோரியதை அடுத்தே வழி நடத்தல் குழுவின் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

0 Responses to புதிய அரசியலமைப்பினைத் தயாரிக்கும் பணிகளுக்கு சுதந்திரக் கட்சி முட்டுக்கட்டை: சுமந்திரன்