Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

2011 ஆம் ஆண்டு ஜப்பானைத் தாக்கிய பூகம்பத்தாலும் சுனாமி அலைகளாலும் கடுமையாகப் பாதிக்கப் பட்ட ஃபுக்குஷிமா அணு உலையில் முன்பு எப்போதும் இல்லாதளவு கதிர் வீச்சின் (Radiation) அளவு மிக அதிகமாக இருப்பதாகவும் ரியாக்டருக்கு அண்மையில் அதனைக் கண்காணிக்கக் கூடிய ரோபோ கமெராக்களையே உருக வைக்கும் அளவுக்கு அவை இருப்பதாகவும் ஜப்பான் அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இக்காரணத்தால் இந்த அணு உலைப் பகுதியை வருங்காலத்தில் மனித இனத்துக்கோ அல்லது ஏனைய உயிரினங்களுக்கோ பாதிப்பு ஏற்படாதவாறு எவ்வாறு செயல் இழக்கச் செய்வது எனத் தெரியாது அவர்கள் கலக்கமுற்றுள்ளனர். இந்த அதிகபட்ச கதிர் வீச்சின் அளவும் விசேடமாகத் தயாரிக்கப் பட்டு தூர இருந்து இயக்கக் கூடிய ரோபோ கமெரா ஒன்றின் உதவியால் தான் பதியப் பட்டுள்ளது. ஆனாலும் இக்கதிர் வீச்சும் ரியாக்டருக்கு வெளியே கசிவடையவில்லை என ஜப்பான் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஃபுக்குஷிமா அணு உலையை இயக்கும் டோக்கியோ எலெக்டிரிக் பவர் கோ அதாவது TEPCO என்ற நிறுவனம் அளித்த தகவலில் 2 ஆவது இலக்க ரியாக்டரில் தான் தற்போது கதிர்வீச்சு அதிகமாக இருப்பதாகவும் இதன் அளவு மணித்தியாலத்துக்கு 530 sieverts என ரோபோட் கமெரா மூலம் கணிக்கப் பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தளவு கதிர் வீச்சை 2 மணித்தியாலங்களுக்கு மேல் கண்காணிப்புக் கமெராவால் தாக்குப் பிடிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. 2012  ஆம் ஆண்டு குறித்த அணு உலையில் கதிர் வீச்சு அளவு மணித்தியாலத்துக்கு 73 sieverts ஆகவே இருந்தது. 2011 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் திகதி ஜப்பானின் கடலுக்கு அடியே ஏற்பட்ட வலிமையான நிலநடுக்கம் ஏற்படுத்திய சுனாமி அலைகள் அதன் வடகிழக்குக் கடற்கரையைத் துவம்சம் செய்ததில் 18 000 பொது மக்கள் பலியாகியும் காணாமற் போயும் இருந்தனர். மேலும் ஃபுக்குஷிமா அணு உலையும் மோசமாகப் பாதிக்கப் பட்டு கதிர் வீச்சு அபாயம் ஏற்பட்டது.

1986 ஆம்  ஆண்டு உக்ரைனின் சேர்னோபிலில் ஏற்பட்ட உலகின் மிக மோசமான கதிர் வீச்சு விபத்தை அடுத்து ஜப்பானின் ஃபுக்குஷிமா அணு உலை விபத்தே மிக அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என அதிகாரிகள் கூறுவது குறிப்பிடத்தக்கது.

0 Responses to 2011 சுனாமியால் பாதிக்கப் பட்ட ஜப்பானின் ஃபுக்குஷிமா அணு உலையில் கதிர் வீச்சின் அளவு மிக அதிக அளவில்..

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com