Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஆப்கானின் முன்னால் யுத்தத் தளபதியான (warloard) குல்புடின் ஹெக்மத்யார் என்பவரின் பெயரை ISIS மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகளுக்கான தடைப் பட்டியலில் இருந்து ஐ.நா நீக்கம் செய்துள்ளது. வெள்ளிக்கிழமை ஐ.நா பாதுகாப்புச் சபை வெளியிட்ட அறிக்கையில், ஹெஷ்ப் ஈ இஸ்லாமி என்ற இஸ்லாமிய அமைப்பின் தலைவரான ஹெக்மத்யாரின் பெயர் தீவிரவாதப் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப் பட்டிருப்பதாகவும் இனிமேல் அவரது சொத்துக்கள் முடக்கம் செய்யப் பட மாட்டாது என்பதுடன் அவருக்குப் போக்குவரத்துத் தடையும் நீக்கம் செய்யப் பட்டு ஆயுதங்கள் விற்பனை தொடர்பான குற்றச்சாட்டும் ரத்து செய்யப் படுவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

இவர் முன்னதாக ஆப்கான் அரசுடன் கடந்த வருடம் செப்டம்பரில்  முக்கியத்துவம் வாய்ந்த சமாதான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு இருந்தவர் என்பதுடன் சில வாரங்களில் ஆப்கானுக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப் பட்டதும் குறிப்பிடத்தக்கது.

2011 ஆம் ஆண்டு ஜனவரியில் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பதுங்கி இருந்ததாகக் கருதப் படும் 67 வயதுடைய ஹெக்மத்யார் 2003 ஆம் ஆண்டு பெப்ரவரி 20 ஆம் திகதி தீவிரவாதப் பெயர்ப் பட்டியலில் உள்ளடக்கப் பட்டிருந்தார். தலிபான்கள் ஆட்சியில் முன்னால் பிரதமராகக் கடமையாற்றிய ஹெக்மத்யார் 1980 களில் சோவியத் யூனியனுக்கு எதிராகச் செயற்பட்ட முக்கிய கமாண்டர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் 2001 ஆம் ஆண்டு அமெரிக்கா ஆப்கான் மீது போர் தொடுத்து தலிபான்கள் வீழ்ச்சி அடையத் தொடங்கிய பின்னர் அமெரிக்க மாநிலத் திணைக்களம் ஹெக்மத்யார் இனை ஒரு தீவிரவாதியாகச் சித்தரித்ததுடன் அல்கொய்தா மற்றும் தலிபான்களால் மேற்கொள்ளப் பட்ட பல தாக்குதல்களுக்கு ஆதரவளித்ததாக அவர் மீது குற்றம் சுமத்தி வந்ததும் நோக்கத்தக்கது.

0 Responses to முன்னால் ஆப்கான் யுத்தத் தளபதியான குல்புடின் ஹெக்மத்யார் இனது பெயரை தீவிரவாதப் பட்டியலில் இருந்து நீக்கியது ஐ.நா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com