Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அதிபர் டொனால்டு டிரம்ப் விசா தடை உத்தரவால் 4 மாத குழந்தையின் இதய ஆபரேஷன் பாதிக்கப்பட்டு உள்ளது.

ஈரானை சேர்ந்த பாத்திமா என்ற 4 மாத பெண் குழந்தைக்கு இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக அந்த குழந்தைக்கு அமெரிக்காவில் ஓரிகன் சுகாதாரம், அறிவியல் பல்கலைக்கழக மருத்துவமனையில் இதயத்தை திறந்து அறுவை சிகிச்சை செய்ய இருந்தனர்.ஆனால் இப்போது டிரம்ப் பிறப்பித்த உத்தரவால் இந்தக் குழந்தைக்கும், குடும்பத்தினருக்கும் அமெரிக்கா விசா வழங்காது.

இதன் காரணமாக அந்தக் குழந்தைக்கு அமெரிக்காவில் இதய ஆபரேஷன் செய்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இது தொடர்பாக அமெரிக்காவில் 13 ஆண்டுகளாக வசித்து வருகிற அந்தக் குழந்தையின் நெருங்கிய உறவினர் சேம் தாகுஜதா மிகுந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.

அவர், நல்ல தரமான சிகிச்சை கிடைக்கும் என்றுதான் குழந்தைக்கு ஓரிகன்
சுகாதாரம், அறிவியல் பல்கலைக்கழக மருத்துவமனையில் இதய ஆபரேஷன் செய்ய முடிவாகி இருந்தது. இப்போது விசா பிரச்சினையால் அது நடக்காது என்று தெரிந்துவிட்டது என்று கூறியுள்ளார்.

0 Responses to டொனால்டு டிரம்ப் விசா தடை உத்தரவால் 4 மாத குழந்தையின் இதய ஆபரேஷன் பாதிக்கப்பட்டு உள்ளது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com