Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

‘இலங்கையின் சுதந்திர தினம் பெப்ரவரி 04; தமிழ்த் தேசிய இனத்தின் துக்கதினம்.’ என்னும் அடையாளக் கோசத்துடன் யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை காலை ஆர்ப்பாட்டப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்காத அரசாங்கத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு கறுப்புக் கொடிகளை கைகளில் ஏந்தி போராட்டக்காரர்கள் கோசம் எழுப்பினர்.

0 Responses to ‘தமிழ்த் தேசிய இனத்தின் துக்கதினம் இன்று’ கறுப்புக் கொடி ஏந்தி யாழில் போராட்டம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com