மஹிந்த ராஜபக்ஷ, நாட்டு மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுவதைக் கைவிட்டு, பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வினைக் காணுவதற்கு இணங்கி வர வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.
அரசியலமைப்பு தயாரிப்பு செயற்பாடுகளில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளில் பிரிக்க முடியாத ஐக்கிய நாட்டுக்குள் ஒரு அரசியல் தீர்வு என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிழக்கு மாகாணத்தின் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடத் தொகுதிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று புதன்கிழமை உத்தியோகபூர்வமாகத் திறந்துவைத்தார். அந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “இப்போது நாம் பேச்சுவார்த்தை மூலமும் புதிய அரசியலமைப்பு மூலமும் தேசிய பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காணும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளோம். சமத்துவத்தின் அடிப்படையிலான சமாதானமே எமது நோக்கம்.
எமது இத்தகைய முயற்சிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்ப்புத் தெரிவித்து புதிய அரசாங்கம் அமைக்கப் போவதாக பிரச்சினைகளைக் கிளப்பி வருகின்றார். பிரிக்கப்படாத நாட்டுக்குள் ஒரு நிரந்தரத்தீர்வு என்பதே எமது நிலைப்பாடு. அதற்கு அவரது முழுமையான ஒத்துழைப்பும் அவசியமாகும்.” என்றுள்ளார்.

0 Responses to பிரிவினைச் செயற்பாடுகளில் ஈடுபடுவதை மஹிந்த நிறுத்த வேண்டும்: சம்பந்தன்