எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் எதிர்பார்ப்புப் படி ஐக்கிய இலங்கைக்குள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுக்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரிப்பதாகவும் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் பகல் கனவு ஒருபோதும் பலிக்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியலமைப்பு நாட்டைப் பிளவுபடுத்தும் என முன்வைக்கப்படும் விமர்சனங்கள் அடிப்படையற்றவை. அரசாங்கத்தின் மீது முன்வைக்கப்படும் விமர்சனங்கள் குற்றச்சாட்டுக்கள் அரசாங்கத்திற்குப் பெரும் பலமாகவே அமையும். பிரச்சினை இல்லாத நாடுகள் கிடையாது. மாகாண சபைகளை நடைமுறைப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகளின் போதும் இதேபோன்று எதிர்ப்புகள் வெளிப்பட்டன என்றும் அவர் கூறியுள்ளார்.
கிழக்கு மாகாணத்தின் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடத் தொகுதிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று புதன்கிழமை உத்தியோகபூர்வமாகத் திறந்துவைத்து பேசும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியுடன் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் அகமட் நஸீர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
அங்கு உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது, “கடந்த 2 வருடத்திற்கு முன்பு இடம்பெற்ற தேர்தலில் கிழக்கு மக்கள் எனக்கு அமோக ஆதரவளித்தனர். அதற்கு கௌரவமும் நன்றியும் தெரிவிக்கும் வகையிலேயே நான் இன்று கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ளேன். இந்த மக்களுடைய முகங்களைக் காண்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
கிழக்கு மக்கள் பல எதிர்பார்ப்புடனேயே என்னைத் தெரிவு செய்தனர். அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெளிவுபடுத்தியுள்ளார். அவரது எதிர்பார்ப்பும் எமது நோக்கமும் ஒன்றே. ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து இன மத மக்களும் சமாதானமாக நல்லிணக்கத்துடன் வாழும் சூழ்நிலையை உருவாக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடரும்.
நீண்டகால யுத்தம் வடக்கு கிழக்கு மக்களைப் பாரிய துன்பத்திற்குள்ளாக்கியது போல் ஏனைய பகுதி மக்களும் இதன் மூலம் பல்வேறு பாதிப்புகளை எதிர்நோக்கினர். யுத்தத்தின் பின்னடைவை மீளக் கட்டியெழுப்பவே மக்கள் என்னைத் தெரிவுசெய்துள்ளனர். அவர்களின் நம்பிக்கையை நாம் நிறைவேற்றுவோம்.
மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாத வகையில் அரசாங்கம் செயற்படும். புதிய அரசியலமைப்பு தொடர்பில் பலரும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அது நாட்டைச் சீரழித்துவிடும், பிளவுபடுத்திவிடும் என்றும் சர்வதேச அழுத்தங்களுக்கு நாடு அடிமைப்பட்டுவிடும் என்றெல்லாம் விமர்சிக்கின்றனர்.
மாகாண சபை அறிமுகப்படுத்தப்பட்ட போதும் ஒரு மாகாணத்திலிருந்து இன்னொரு மாகாணத்திற்குச் செல்ல விசா எடுக்க நேரிடும் என்றனர். அன்று போலவே இன்றும் எதிர்ப்புக் குரல்கள் எழுகின்றன. நாட்டின் ஐக்கியம் மக்களிடையே சமாதானம் நல்லிணக்கம் ஏற்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும். அதற்கு சகலரதும் பூரண ஒத்துழைப்பு அவசியமாகும்.
எமது பிரச்சினைகளை மக்கள் தெளிவுபடுத்திக்கொள்வது முக்கியமாகும். மட்டக்களப்பு மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுபெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். எமது செயற்பாடுகள் வெற்றிபெறும். இறைவனின் பெரும் ஆசீர்வாதம் எமக்குண்டு.” என்றுள்ளார்.

0 Responses to சம்பந்தனின் எதிர்பார்ப்புப் படி ஐக்கிய இலங்கைக்குள் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வு: ஜனாதிபதி