தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் வடக்கில் எந்தவித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை என்று பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “வடக்கில் வாள் வெட்டு கும்பல்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த வாள் வெட்டு கும்பல்களினால் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் எதுவும் கிடையாது.சிலர் இதனை தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்ற வகையில் பிரச்சாரம் செய்கின்றனர்.
வடக்கிலோ தெற்கிலோ சட்டத்தை கையில் எடுப்பதற்கு எவருக்கும் இடமளிக்கப்பட முடியாது. நாட்டின் புலனாய்வுப் பிரிவு வலுவிழந்துள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை.” என்றுள்ளார்.

0 Responses to தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக வடக்கில் எதுவும் நடைபெறவில்லை: ருவான் விஜயவர்த்தன