முன்னிலை சோஷலிசக் கட்சியின் அரசியல்குழு உறுப்பினர் குமார் குணரட்னத்துக்கு நேற்று புதன்கிழமை முதல் இலங்கைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியப் பிரஜையான குமார் குணரட்னம், சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சுமார் ஒரு வருடம் சிறையில் இருந்து அண்மையில் விடுதலையானார். இந்த நிலையிலேயே அவருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

0 Responses to குமார் குணரட்னத்துக்கு இலங்கைக் குடியுரிமை!