Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐ.நா சபையின் உயரிய பதவியான பாதுகாப்புச் செயலாளர் பதவியினை வகுத்த முன்னால் தலைவரான தென் கொரியாவைச் சேர்ந்த பான் கீ மூன் அந்நாட்டின் அதிபர் பதவியை அடைவதற்கான முயற்சியை முடித்துக் கொண்டதாகவும், தென் கொரிய அரசியலில் இருந்து அவரது விலகல் மூலம் வாழ்நாள் முழுவதுக்குமான ஒரு அரசியல் அந்தஸ்தை இழந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஐ.நா பாதுகாப்புச் செயலாளராக கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்துக்கு நியூயோர்க்கில் தங்கியிருந்த பான் கீ மூன் கடந்த மாதம் தான் தென்கொரியாவுக்குத் திரும்பி இருந்தார் என்பதுடன் இவ்வருடம் அங்கு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் அவர் பங்குபற்றுவார் எனப் பாரியளவில் பொது மக்களால் எதிர்பார்க்கப் பட்டும் இருந்தது. ஆனால் இவரது உத்தேசமான வேட்பாளர் முயற்சி பல தடைகளையும் தொடர்ந்து முன்னேறிச் செல்ல முடியாமலும் இருந்ததாகக் கூறப்படுகின்றது. மேலும் இவரது முடிவை அடுத்து அவசரமாகக் கூட்டப் பட்ட பத்திரிகையாளர் மாநாட்டில் பான் கீ மூன் பேசும் போது, எனது தலைமைத்துவத்தின் கீழ் எமது நாட்டை ஒன்றினைக்கும் படியாக அரசியலில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற தூய்மையான திட்டத்தை நான் கைவிடத் தீர்மானித்துள்ளேன் என்றும் இதன் மூலம் பல பொது மக்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்குவதற்கு என்னை மன்னிக்க வேண்டும் என்றும் தீர்க்கமாகத் தெரிவித்துள்ளார்.

தென்கொரியாவின் தற்போதைய அதிபர் பார்க் கெயுன் ஹை உம் அவர் சார்ந்த அரச நிர்வாகமும் அண்மைக் காலமாக கடும் ஊழல் குற்றச்சாட்டு வழக்குகளுக்கு உள்ளாகியுள்ள நிலையில் பொது மக்கள் முன்னாலான பல உரையாடல்களில் பான் கீ மூன் தென் கொரிய அரசியலில் மாற்றம் கொண்டு வரப்படுவது அவசியம் என்றும் பேசி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 72 வயதான பான் கீ மூன் பார்க் கெயுன் ஹை இன் சவேனுரி கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப் பட்ட போதும் தென் கொரியாவின் மிக வலிமையான பார்ட்டிசான் அரசியல் பொறிமுறையில் இணைந்து செயற்பட அவர் தவித்த நிலையில் பான் கீ மூனின் உறவினர்கள் சிலர் மீது கூட ஊழல் குற்றச்சாட்டுக்கள் விதிக்கப் பட்டது அவரைக் கடுமையாகப் பாதித்துள்ளது.

இதையடுத்து தென்கொரிய அரசியலில் உள்ள சுயநலம் மிக்க அரசியல் வாதிகளின் செயற்பாட்டால் நான் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளேன் எனவும் அவர்களுடன் இணைந்து செயலாற்றுவது என்பது அர்த்தமற்றது என்றும் பான் கீ மூன் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Responses to பான் கீ மூன் தென்கொரிய அதிபர் போட்டியில் இருந்து விலகல்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com